நண்பர்களுக்கு வணக்கம்.

HiTamila என்ற சமூகவலைத்தளம் எம் தமிழ் மக்களுக்காக உருவாக்க பட்ட ஒரு சமூகவலைதளம் ஆகும்.

உலகத் தமிழர்களின் தொடர்பாடல்களை ஒன்றிணைக்கும் முகமாக இணைய வழியாக HiTamila வலம்வருகின்றது.

HiTamila மூலம் நீங்கள் உங்கள் குடும்பத்தினர் ,உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் உங்கள் துறைசார்ந்த ஆர்வலர்கள் அனைவரிடத்திலும் உங்கள் உணர்வுகளையும் நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.

இதில் நீங்கள் உங்கள் குறுஞ்செய்திகளை பரிமாறிக் கொள்ளலாம். மற்றும் புகைப்படங்கள்,ஒளிப்பதிவுகளை பதிவேற்றம் செய்யலாம். அத்தோடு இணையவழி குழுமங்களையும் அமைத்துக் கொள்ள முடியும் .

உங்கள் சமூகத்தோடு இணைந்து மக்களோடு மக்களாக அனைத்துத் துறைகளூடாகவும் நீங்கள் பயணிக்க முடியும்.

HiTamila செயலி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகின்றோம். இனிவரும் காலங்களில் பல புதிய அணுகுமுறைகளை உள்ளடக்கம் செய்யவிருக்கின்றோம் .

HiTamila செயலி உங்களுக்குப் பல வழிகளிலும் பயனுள்ளதாக அமையும் என்று நம்பினால் இதை நீங்கள் அனைவரிடத்திலும் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றோம் .

HiTamila தளத்தில் பயணிக்கும் உறவுகளை உங்கள் குடும்பத்து உறவுகள் போன்று நினைத்து HiTamila வை பயன்படுத்துங்கள் நண்பர்களே.

HiTamila தளத்தில் தனிமனித தாக்குதல் , ஆபாச புகைப்படங்கள் காணொளிகள் பதிவிடுதல், மற்றும் தமிழினத்திற்கு விரோதமாக எந்தவொரு பதிவுகள் பதிவேற்றம் செய்தாலும் நிபந்தனைகள் இன்றி உங்கள் கணக்கு முடக்கப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எம் இனத்தின் வளர்ச்சிக்காக HiTamila வலைத்தளத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் நண்பர்களே.

நன்றி.
HiTamila Team

 

HiTamila வை பயண்படுத்தும் முறைகளை பார்வையிட